Tuesday, November 29, 2011

Pirai Thedum lyrics

பிறை தேடும் இரவிலே, உயிரே,
எதைத் தேடி அலைகிறாய்?
கதை சொல்ல அழைக்கிறேன், உயிரே!
அன்பே நீ வா!                                       (2)

இருளில் கண்ணீரும் எதற்கு?
மடியில் கண் மூட வா!
அழகே இந்த சோகம் எதற்கு?
நான் உன் தாயும் அல்லவா?

உனக்கென மட்டும் வாழும் இதயமடி ...
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி ...

பிறை தேடும் இரவிலே, உயிரே,
எதைத் தேடி அலைகிறாய்?
கதை சொல்ல அழைக்கிறேன், உயிரே!
அன்பே நீ வா!

அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா?
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா?

என் ஆயுள் இரேகை நீயடி!
என் ஆனி வேரடி!
சுமை தாங்கும் எந்தன் கண்மணி!
என்னை சுடும் பனி ...

உனக்கென மட்டும் வாழும் இதயமடி!
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி!

பிறை தேடும் இரவிலே, உயிரே,
எதைத் தேடி அலைகிறாய்?
கதை சொல்ல அழைக்கிறேன், உயிரே!
அன்பே நீ வா!

விழியின் அந்த தேடலும்,
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்!
அனல் மேலே வாழ்கிறாய்,
நதி போலே பாய்கிறாய்!
ஒரு காரணம் இல்லையே, மீசை வைத்த பிள்ளையே!

இதைக்  காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா?
தினம் கொல்லும் இந்த பூமியில்
நீ வரம் தரும் இடம்!

உனக்கென மட்டும் வாழும் இதயமடி!
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி!

No comments:

Post a Comment