Tuesday, January 10, 2012

Kangal Neeye - Lyrics - Muppozhudhum un Karpanaigal




 

Song: 
Kangal Neeye
Film: Muppozhudhum Un Karpanaigal
Lyrics: Thamarai
Singer: Sithara
Music: GV Prakash

பல்லவி:

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

அனு பல்லவி :

பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
என்னையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
நான் தான் நீ ... வேறில்லை

முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர் என்னும் தீர்த்தத்தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

(கண்கள் நீயே காற்றும் நீயே)

சரணம் 1:

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை

பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பல பல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என் மகன்

என்னை தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்கத்தை நான் கண்டேன் கண்ணே
என்னை கிள்ளும் உன் விரல் மெத்தைக்குள்
என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே

சரணம் 2:

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளி போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து 
கருவில் வைக்க நினைக்கிறேன்

போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது
ரவி வர்மன் நீ
பசி என்றல் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
உடல்  செவ்வாது  பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

(கண்கள் நீயே காற்றும் நீயே)


No comments:

Post a Comment